செம சிரிப்பு இருக்கு! ஓடிடியில் வெளியானது ‘வடக்குப்பட்டி ராமசாமி’!

Vadakkupatti Ramasamy OTT சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்து இருந்தார். 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு படம் இருந்த காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது என்றே கூறலாம்.

read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

விமர்சன ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினாலே படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக படம் தமிழகத்தில் மட்டுமே 14 கோடி வரை வசூல் செய்து இருந்தது. இன்னுமே சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனையடுத்து, திரையரங்குகளில் படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தனர்.

READ MORE- வசூலில் அதிரடி காட்டி மிரள விட்ட ‘பிரம்மயுகம்’! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?

அவர்களுக்காகவே படம் இன்று முதல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. எனவே, வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பார்த்துவிட்டு வயிறு குலுங்க நீங்கள் சிரிக்க வேண்டும் என்றால் அமேசான் தளத்தில் சென்று பார்த்து மகிழுங்கள். படம் கடந்த வாரமே ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் கடந்த வாரம் வெளியாகாமல் இந்த வாரம் வெளியாகியுள்ளது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment