600 திரையரங்குகளில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

வடக்குப்பட்டி ராமசாமி

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில்  சந்தானம் நடித்துள்ள திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

வயிறு குலுங்க சிரிக்க வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு போங்க! ட்விட்டர் விமர்சனம் இதோ!

விமர்சனம் 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக தங்களுடய விமர்சனங்களை கூறிவருகிறார்கள்.

முதல் நாள் வசூல் 

இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவலை பார்க்கலாம். அதன்படி, 600 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதன் காரணமாக வரும் நாட்களிலே படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் படத்தின் வசூல் இந்த இரண்டு நாட்களில் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment