8,00,000 குரங்கு அம்மை தடுப்பூசிகளுக்கு கையெழுத்திட்ட அமெரிக்கா

அமெரிக்கா மேலும் 8,00,000 குரங்கு அம்மை தடுப்பூசிகளுக்கு கையெழுத்திட்டுள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் முக்கியமாக தோல் தொடர்பு மூலம் பரவுகிறது. மேலும் தொற்று உள்ள ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை தொடுவதன் மூலமும் இது பரவுகிறது.

பல வாரங்களுக்கு பிறகு தற்போது, குரங்கு அம்மை தடுப்பூசியின் கிட்டத்தட்ட 8,00,000 டோஸ்கள் விரைவில் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் நேற்று(ஜூலை 27) தெரிவித்தனர்.

அமெரிக்கா முன்னதாகவே 3,10,000 க்கும் மேற்பட்ட டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசியை மாநில மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகளுக்கு அனுப்பியுள்ளது.

ஆனால் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்று கூறுகின்றன.

author avatar
Varathalakshmi

Leave a Comment