Monday, June 3, 2024

உ.பி காவலர்கள் சீருடையுடன் இதை செய்ய கூடாது- டிஜிபி சவுகான்

உத்திரபிரதேச காவலர்கள், சமூக வலைதளங்களில் சீருடையுடன் வீடியோ, ரீல்ஸ் பதிவேற்றவோ நேரடி ஒளிபரப்பு செய்யவோ தடை 

இன்று சாதாரண மக்கள் முதல் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் வரை பலரும் சமூகவலைதளைங்களில் லைக்குகளை அள்ளுவதற்காக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட தடை 

அந்த வகையில், உத்திரபிரதேச காவலர்களுக்கு அம்மாநில டிஜிபி சவுகான் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, பணியில் இருக்கும்போது, சமூக வலைதளங்களில் சீருடையுடன் வீடியோ, ரீல்ஸ் பதிவேற்றவோ நேரடி ஒளிபரப்பு செய்யவோ தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே போல் மற்ற நேரங்களில் காவலர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ போடவும், பெண்கள், பட்டியலினத்தவரின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கவும் கூடாது எனவும்உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES