இதுவரை இல்லாத அளவு நியூயார்க்கில் வெள்ளம்..!

நியூயோர்க்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இன்று இரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மேயர் பில் டி பிளாசியா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதுவரை 5,300 வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மழை அடுத்த சில மணி நேரங்கள் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மீட்பு பணிகள் தொடங்கும். அதனால் சுரங்கபாதைகள், சாலை ஓரங்கள் ஆகிய பகுதிகளில் யாரும் நிற்கவேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக அனைவரும் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.