Monday, June 3, 2024

இந்தியர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நாள்..! இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து..!

சந்திரயான் 3 ஏவுதலைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான 25 மணி நேரம், 30 நிமிட என்ற ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘இஸ்ரோவின் பேலோடுகள் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகள், பெருமை மற்றும் நம்பிக்கையை சுமந்து செல்கிறது. சந்திரயான்-3 ஏவுதல் நம் அனைவரின் இதயங்களையும் பெருமிதத்தால் பெருக்குகிறது. அயராத முயற்சிக்கு நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நாள். ஜெய் ஹிந்த்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

RELATED ARTICLES