உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியது

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போர்க்களத்தில் உள்ள  ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திருப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

அதிபர் வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபோரோவ் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை மருத்துவரால் பரிசோதித்தபோது பலத்த காயங்கள் எதுவும் காணப்படவில்லை” என்றும் வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவக் குழுவிடமிருந்து முதலுதவி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்,என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.ரஷ்யாவிடம் இருந்து  மீண்டும் கைப்பற்றப்பட்ட நகரமான இசியத்தில் ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திரும்புகையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment