இ-பாஸ் இன்றி உதயநிதி பயணம்.! சட்டம் தன் கடமையை செய்யும் – அமைச்சர் ஜெயக்குமார்.!

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி வரை பயணம் செய்தது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையிலுள்ள யானைக்கவுனில் நடத்தி வரும் காய்ச்சலுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்ததை பின்னர் அங்குள்ள மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். அதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கொரோனாவிற்கான விழிப்புணர்வை தன்னார்வலர்களை கொண்டு சென்னையில் குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடத்தியது நல்ல பலனை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில்  தினமும் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, அமைச்சர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகம் பரவும் இச்சமயத்தில் இ-பாஸ் இன்றி தூத்துக்குடிக்கு பயணம் செய்துள்ளார். அவர் இ-பாஸ் வைத்து பயணம் செய்தார் என்றால், அதை ஏன் டுவிட்டரில் பகிரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

கொரோனா தொற்று பரவுதலை கருத்தில் கொள்ளாமலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் அவசியம் என்ற ஆணையை மதிக்காமல் இ-பாஸ் இன்றி பயணம் செய்த உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.