ட்விட்டர் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை பேப்பர் கொண்டு வர உத்தரவு.! வெளியான தகவல்.!

ட்விட்டர் ஊழியர்கள், அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை காகிதத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்.

ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து, ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு நகர்த்தியுள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகத்தில் வாடகை செலுத்துவதைத் தவறவிட்ட மஸ்க், அதன் நான்கு தளங்களை மூடிவிட்டு அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு மாற்றியுள்ளார். குறுகிய இடங்களுக்குள் அதிக மக்கள் நிரம்பியிருப்பதால், மீதமுள்ள உணவு மற்றும் உடல் துர்நாற்றத்தின் வாசனை அலுவலகங்களில் நீடித்தது என பணியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

மேலும் குளியலறைகள் அசுத்தமாகிவிட்டன. துப்புரவு சேவைகளையும் நிறுத்திவிட்டதால், சில ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதங்களை வீட்டிலிருந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மஸ்க்கிடம் இது உண்மையா என்று ட்விட்டரில் கேட்டதற்கு, அவர் “BYOTP! ஐயோ, அரை நாள் இது உண்மையாக இருந்தது என்று பதில் கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment