துக்ளக் தர்பார் அப்டேட்.! நாளை ரசிகர்களுக்கு இசை விருந்து.!

நாளை துக்ளக் தர்பார் படத்தின் அணைத்து பாடல்களும் 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் ராசிக்கன்னா, அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை துக்ளக் தர்பார் படத்தின் அணைத்து பாடல்களும் 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளதால் பாடலின் மீது எதிர்பார்ப்பு அதிமாக நிலவியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.