‘No Caste’ சான்றிதழ் வாங்க முயற்சி செய்து வருகிறேன் – இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு.!

சென்னையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சி  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ” பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.

Vetrimaaran Speech
Vetrimaaran Speech Image Source Google

இது குறித்து பேசிய இயக்குன வெற்றிமாறன் ” பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். என் பிள்ளைகளுக்கு ‘No Caste’ சான்றிதழ் வாங்க முயன்று வருகிறேன்.சமூக நீதி அடிப்படையில், உரிமையை பெறும்போது சான்றிதழ் நிச்சயம் தேவை.

Vetrimaaran
Vetrimaaran Image Source Google

ஆனால், எனக்கு தேவையில்லை எனும்போது (என் சாதியை கூற மறுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் சமூக நீதி & சலுகைகள் கிடைக்கும் இடத்தில் சாதி சான்றிதழ் பயன்படுத்தி கொள்ளலாம்.  சில மக்களுக்கு சாதியை வைத்துதான் அடிப்படை உரிமைகள் கிடைக்கிறது” என பேசியுள்ளார்.

Vetrimaaran
Vetrimaaran Image Source Google

மேலும், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து “விடுதலை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment