“பணக்கார நண்பர்களுக்காக மக்கள் உயிருடன் விளையாடிய டிரம்ப்”- ஜோ பைடன் குற்றசாட்டு!

தனது பணக்கார நண்பர்களுக்காக டிரம்ப், மக்கள் உயிருடன் விளையாடினார் என ஜோ பைடன் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்தநிலையில், தனது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்ட ஜோ பைடன், பணக்கார நண்பர்களுக்காக டிரம்ப் மக்கள் உயிருடன் விளையாடி உள்ளார் என குற்றம் சாட்டினார்.

மேலும், கொரோனா தொற்றின் தீவிரம் அதிபர் டிரம்ப் நன்கு அறிந்துள்ளார் எனவும், அவற்றின் தீவிரம் குறித்து தெரிந்தும், மக்களை டிரம்ப் ஏமாற்றிவிட்டார் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பங்குசந்தையில் சரிவு ஏற்படக்கூடாது என்பதிலே அவர் குறியாக இருந்ததாகவும், ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.