கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தெலுங்கில் செய்த டிஆர்பி ரெக்கார்ட்.!

துல்க்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கில்

By ragi | Published: Jul 11, 2020 10:21 AM

துல்க்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கில் அனைத்து படங்களையும் ஓவர் டேக் செய்து டிஆர்பியில் புதிய சாதனையை படைத்துள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை ஆன்றோ ஜோசப் தயாரித்துள்ளார். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். அழகான பெண்கள் சிலர் ஆண்களை ஏமாற்றும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிப்பரப்ப பட்ட இந்த படம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.1ஐ பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு வெளியான டப்பிங் படங்கள் அனைத்தும் 6 என்ற அளவிலே டிஆர்பி ரேட்டிங்கை தொடும். ஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் அனைத்து படங்களையும் ஓவர்டேக் செய்து தெலுங்கிலும் சாதனை படைத்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc