Sunday, June 2, 2024

பல் உடைப்பு விவகாரம் – பல்வீர் சிங் சஸ்பெண்ட்..!

பல் உடைப்பு விவகாரத்தில், பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டார். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு ரத்தம் வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கியதாக புகார் எழுந்தது.

அரசியல் தலைவர்கள் பலர் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமை செய்த காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

பல்பீர் சிங் சஸ்பெண்ட் 

புகார் எழுந்ததை அடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில், பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பலவீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடுவதாக பேரவையில் அறிவித்திருந்த நிலையில், டிஜிபி  நடவடிக்கை எடுத்துள்ளார்.

RELATED ARTICLES