Today’s Live: ஆசிரியர் தகுதித் தேர்வு.. TET தாள் 2 முடிவுகள் வெளியீடு.!

TET தாள் 2 முடிவுகள் வெளியீடு :

6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிக்கான (டெட் 2-ம் தாள் தேர்வு) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை கணினி வழியில் நடைபெற்றது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகள்  வெளியாகியுள்ளது. www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

28.03.2023 5.50 PM

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு :

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று ஒபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாகவும், கட்சி விதிகளுக்கு எதிரானதாகவும் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

28.03.2023 5.40 PM

குடியேற்ற பகுதியில் தீ விபத்து :

மெக்சிகோவின் வடக்கு எல்லை நகரமான சியுடாட் ஜுவாரெஸில் உள்ள குடியேற்ற வசதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 39 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.

28.03.2023 4.50 PM

பான் கார்டு – ஆதார் இணைப்பு:

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. விலக்கு பெற்றவர்கள் தவிர்த்து, வருமான வரிச் சட்டம் 1961-இன் கீழ் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், தங்களுடைய ஆதார் கார்டை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Readmore – #BREAKING: பான் கார்டு – ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

28.03.2023 3.20 PM

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் தீர்ப்பு:

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் பிரயாக்ராஜ் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் மாஃபியாவாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது. இந்த வழக்கில் அதிக் அகமது, தினேஷ் பாசி, கான் சவுலத் ஹனிப் ஆகியோருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. ஆதிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப் உட்பட மற்ற ஏழு குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர்.

28.03.2023 2.15 PM

சாலை மறியல் :

கர்நாடகா மாநில அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினரால் ஷிகாரிபுரா சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


28.03.2023 1.28 PM

சிவில் அவதூறு வழக்கு :

ஏக்நாத் ஷிண்டே பிரிவு தலைவர் ராகுல் ரமேஷ் ஷெவாலே தொடர்ந்த சிவில் அவதூறு வழக்கில் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ரவுத்துக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை ஏப்ரல் 17 நடக்கவிருக்கிறது.

28.03.2023 1.10 PM

உமேஷ் பால் கடத்தல் வழக்கு :

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாஃபியா டான் அதிக் அகமது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த வழக்கில், ஆதிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப் உட்பட மற்ற குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

28.03.2023 12.10 PM

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ்:

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28.03.2023 11.15 AM

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு:

கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டை நீதிபதிகள் மஹாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

28.03.2023 11.05 AM

அதிமுக பொதுக்குழு வழக்கு:

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது. தற்போது, அந்த வழக்கை தள்ளுபடி செய்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

28.03.2023 10.40AM

அதிமுக வழக்கு – சற்று நேரத்தில் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் எதிர்த்த வழக்குகளில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது. ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி உடன் சந்திதுள்ளார்.

28.03.2023 10.25 AM

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment