இன்று சந்தனக்கூடு திருவிழா.! இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை.!

ராமநாதபுரம், ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.

இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி (நாளை) அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். இதற்காக மே 31ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது.

இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருடா வருடம் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்துக்கு  13ம் தேதி (நாளை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எர்வாடி சந்தனக்கூடு விழா என்பது எர்வாடி தர்காவில் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா ஓலியல்லாஹ்வின் ஆண்டு நினைவைக்கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது இஸ்லாமிய மாதமான து-அல்-கியாதாவில் கொண்டாடப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.