வரலாற்றில் இன்று (13.05.2022)..!கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று..!

கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

கவிஞர்  கவிஞாயிறு  தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள்  துரைசாமி – புஷ்பம் அம்மாள். இவரின்  துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர் 34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

மேலும்,  நமது தமிழ் நாடு அரசு கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. இவர், கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். ஏழைகளின் நிலையை இவர் துல்லியமாகப் படம் பிடித்து, உலகத்தைத் தாங்குகின்றவன் உழைப்பாளி என்றும், ஆனால் அவன் எதை எதை யெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்றும், தன் தேவைக்கே ஏழை ஏங்க வேண்டியதாயிருக்கிறது இவ்விழிநிலை மாறப் புரட்சி தேவை என தனது கவிதைகள் மூலம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.