உக்ரைனுக்கு, ஜெர்மனி போர் விமானங்களை அனுப்பாது- ஓலாஃப் ஷோல்ஸ்.!

உக்ரைனுக்கு, ஜெர்மனி போர் விமானங்களை அனுப்பாது என்று சான்சிலர் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக, 14 சிறுத்தை 2 A6 ரக (Leopard 2 A6) டாங்கிகளை அனுப்புவதற்கு ஜெர்மன் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பாது என்று  ஜெர்மனியின் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய போரில், ஆயுதங்கள் என்று வரும்போது நான் ஆலோசனை மட்டும் கூற முடியும் எனவும், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் போர் எதுவும் இல்லை, அதற்கான தீவிரத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஓலாஃப் மேலும் கூறினார். ரஷ்யாவின் படையெடுப்பை தடுப்பதற்கு உக்ரைன், மேற்கு நாடுகளிலிருந்து உதவியை நாடி வருவதால், ஜெர்மனி உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பாது என்று ஓலாஃப் வலியுறுத்தி கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இது குறித்து தொடர்ந்து பேசுவது அவசியம் என்று ஓலாஃப் மேலும் கூறினார். ஆனால், ரஷ்யா தொடர்நது ஆக்கிரமிப்பு நடவடிக்கை செய்து போரை நடத்தும் வரை, தற்போதைய போர் நிலைமை மாறாது என்றும் தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment