இந்த வருஷம் அந்த சம்பவம் இல்ல…ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன சூப்பர் ஸ்டார் மனைவி.!

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினி பிறந்த நாள் அன்று அவருடைய ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு வெளிய நின்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருப்பார்கள்.

ரஜினியும் வருடம் வருடம் வெளியே வந்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு கையை அசைத்து தனது முகத்தை காட்டிவிட்டு செல்வார். ஆனால், இந்த வருடம் அந்த சம்பவம் நடைபெறாது என கூறப்படுகிறது. ஏனென்றால், நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளாராம்.

எனவே, ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் வீட்டின் முன்  காத்திருக்க வேண்டாம் என அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினி வீட்டில் இல்லாதது தெரியாமல் வீட்டிற்கு முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும், அவர் தற்போது நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment