தல என அஜித்குமாரை அழைக்க இதுதான் காரணம்.! – நவ்தீப்.!

அஜித்குமாருடன் நவ்தீப் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தீபாவளிக்கு படத்தை வெளியீட திட்டமிட்டுள்ளனர்.

அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வலிமை படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் போது, சில பைக் ரைடர்ஸ்சுடன் சேர்ந்து பயணம் செய்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. அதைபோல் தற்போது அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகர் நவ்தீப், அஜித்துடன் ஹைதராபாத்தில் பைக் ரைடிங் செய்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அஜித் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் ” அஜித் சார் உண்மையான அன்பு கொண்ட மனிதர். எத்தனை அவருடைய எளிமையான குணம் அணிஅவரையும் வியக்க வைக்கும். அற்புதமான மனிதர். இதனால் தான் அவரை தல என ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.” என நெகிழிச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.