கஜா புயலை போன்ற பாதிப்பு இருக்காது – ஆர். பி.உதயகுமார்

முன்பு தாக்கிய கஜா புயலை போன்ற பாதிப்பு இருக்காது எனா ஆர். பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கனமழை, புயல் காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், தாழ்வான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டிடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வரவேண்டும் என்றும் நீர்நிலைகளுக்கு அருகே குழந்தைகளை அனுப்பவேண்டாம் பொதுமக்களும் யாரும் செல்லவேண்டாம் எனவும் மக்கள் அத்தியாவசியமான பொருட்களைக் கையிருப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தப் புயல், கஜா புயல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தாது என்ற தகவல் கிடைத்துள்ளது. அரசு தயார்நிலையில் இருக்கிறது. மக்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment