கைது செய்யப்படுவாரா ஹேமந்த் சோரன்.? அடுத்த ஜார்கண்ட் முதல்வர் இவர்தானாம்…

ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடி தொடர்பான வழக்கில் 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சூரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடமும் கடந்த 20ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு!

கடந்த 20 ஆம் தேதி அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், அதனை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் ஒரு தேதியில் நேரில் ஆஜராக ஹேமந்த் சோரனுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை கொடுத்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் சோரன்.  ஆனால் உச்சநீதிமன்றம் மற்றும் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஹேமந்த் சோரனின் டெல்லியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து 36 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததனர். மேலும், அந்த சமயம் ஹேமந்த்சூரன் அமலாக்கத்துறையினரிடம் நேரில் சோரன் ஆஜராகவில்லை. இதனால் அவர் தலைமறைவாகி விட்டார் என்றும் கூறப்பட்டது.

நீதிமன்றங்களில் அமலாக்கத்துறைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனை தொடர்ந்து நேற்று ஜார்கண்ட் மாநில எம்எல்ஏக்கள் உடன் அவசர ஆலோசனையில் சோரன் பங்கேற்றார். அப்போது அவரது மனைவி கல்பனாவும் பங்கேற்றார்.

இதனை அடுத்து ஆளும் ஜார்க்கண்ட் முத்தி மோர்சா கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  ஹேமந்த் சோரன் தலைமறைவாகவில்லை. அவர் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார். அதனை அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பி விட்டார் என்று அறிவித்தனர்.

இன்று அமலாக்கத்துறை விசாரணையில் நேரில் ஹேமந்த் சோரன் ஆஜராகும் பட்சத்தில்,  ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால், ஜார்கண்ட் மாநில முதல்வராக அவரது மனைவி கல்பனா பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. மேலும், ஜார்கண்ட் முத்தி மோட்சாவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் கூறுகையில், எங்களது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஹேமந்த் சோரனுக்கு முழு ஆதரவை அளிப்போம் என கூறியுள்ளார்.

Leave a Comment