கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்.! சாமி வந்திருப்பதாக கூறி தலை விரித்தாடி ஆம்புலன்ஸில் ஏற மறுப்பு.!

கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் தனக்கு சாமி வந்திருப்பதாக கூறி சாமியாடி கொண்டு ஆம்புலன்ஸில் ஏற மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹொனாலி பகுதியில் வசித்து வருபவர் ஜக்கம்மா. இவர் கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸூடன் சுகாதார துறை அதிகாரிகள் வந்து அவரை ஆம்புலன்ஸில் ஏற கூறியுள்ளனர்.

ஆனால் ஜக்கம்மா ஆம்புலன்ஸில் ஏற மறுத்ததுடன் தனக்குள் சாமி வந்திருப்பதாக கூறி தலையை விரித்து கொண்டு சாமி ஆடியுள்ளார். இதனை கண்ட சுகாதார துறை அதிகாரிகள் திகைத்து நிற்க , ஜக்கம்மாவின் வீட்டின் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சாமியாடும் ஜக்கம்மாவிடம் கொரோனா எப்போது முடிவடையும் என்று கேள்வி எழுப்ப, விரைவில் கொரோனா பாதிப்பு குணமடைந்து நிலைமை சீராகி விடும் என்று ஜக்கம்மா அருள்வாக்கு கூறியுள்ளார் . அதனையடுத்து ஜக்கம்மா சகஜ நிலைக்கு திரும்பும் வரை அதிகாரிகள் வெயிட் செய்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்துயது குறிப்பிடத்தக்கது.