17 ஆம் நூற்றாண்டில் வைரக்கல் பதித்த ரூ.27 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்ணாடி ஏலம்..!

17 ஆம் நூற்றாண்டில் வைரக்கல் பதித்த மூக்கு கண்ணாடி ஏலம் விடப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் வழியாக 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முகலாயர் காலத்து இரண்டு கண்ணாடிகள் ஏலம் விடப்படவுள்ளது. இதில் மூக்கு கண்ணாடி ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.27 கோடி ஆகும். இதில் உள்ள முதல் ஜோடி கண்ணாடி வைரத்தால் ஆன பிரேம்களில் மரகதத்தால் ஆன லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது கேட் ஆப் பாரடைஸ் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாவது ஜோடியான மூக்கு கண்ணாடி வைரத்தால் ஆன பிரேம்களில் வைர லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹலோ ஆப் லைட் என்று அழைக்கப்படுகிறது.  மேலும், இதிலுள்ள லென்ஸ்கள் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். இந்த மூக்கு கண்ணாடியின் பிரேம்கள் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். இந்த கண்ணாடிகள் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முகலாய இளவரசருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள வைரம் கோல்கொண்டா சுரங்கத்திலிருந்தும், மரகதங்கள் கொலம்பியாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை ஆகும்.