திரில்லர் கலந்த "A" படத்தின் டிரைலர்.!

 தெலுங்கில் திரில்லர் படமாக உருவாகும் "A" படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும்

By ragi | Published: Jun 04, 2020 05:20 PM

 தெலுங்கில் திரில்லர் படமாக உருவாகும் "A" படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவந்திகா புரொடக்ஷன் வழங்கி கீதா மின்சாலா தயாரிக்கும் தெலுங்கு படம் "A" (AD INFINITUM). இந்த படத்தை உகந்தர் முனி இயக்குகிறார். இந்த படத்தில் நிதின் பிரசன்னா, ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரவீன் கே. பங்கரி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஜய் குரகுலா இசையமைத்துள்ளார். சமீபத்தில் திரில்லர் கலந்த இந்த படத்தின் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை சந்தோஷ் சிவன் நாளைய தினம் வெளியிடவுள்ளதாக படத்தின் இயக்குனரான உகர்ந்தர் முனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Step2: Place in ads Display sections

unicc