ஆதார் அட்டையில் தமிழுக்கு பதில் ஹிந்தி !

ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” எனும் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டு, ஹிந்தியில் பதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம் எனவும், இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப் பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது புதிதாக வழங்கப்படும் PVC ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வார்த்தை, ஹிந்தியில் பதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.