அந்நியன் கதை எனக்கே சொந்தம்- இயக்குநர் ஷங்கர் விளக்கம்..!

அந்நியன் திரைப்படத்தின் கதை தனக்கே சொந்தம் என்று இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலளித்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்நியன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்நியன் படத்தின் தயாரிப்பாளர்  ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது. என்று ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.

இதனை தொடர்ந்த்து இயக்குனர் ஷங்கர் தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஷங்கர் விளக்கம் அளித்திருப்பது ” அந்நியன் திரைப்படத்தின் கதை எனக்கு தான் சொந்தம். திரைப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம் என் பெயர் தான் இடம்பெற்றிருந்தது. சுஜாதாவை நான்தான் வசனம் எழுத அழைத்து வந்தேன். அந்நியன் திரைப்படத்தின் கதையை முழுமையாக பயன்படுத்தும் உரிமை எனக்கு உள்ளது “என்றும் தெரிவித்துள்ளார்.

அந்நியன்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.