வெளியானது ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்.! திரையரங்குகளில் போலீஸ் குவிப்பு…

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று வெளியாகியுள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் கேரள பெண்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை கோரியது. படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் நேற்று மறுத்ததை அடுத்து இன்று படம் வெளியாகவுள்ளது.

The Kerala Story
A Banner From The Kerala Story

இந்நிலையில், கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க கேரளா மற்றும் தமிழக திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டிஜிபி அதிரடி உத்தரவு:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும், உரிய பாதுகாப்பு அளிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் சட்ட ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் வெளியிட்டால், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறித்தியுள்ளார்.

The Kerala Story
A Banner From The Kerala Story

சென்னையில் பலத்த பாதுகாப்பு:

அதன்படி, சென்னையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படும் 15 திரையரங்குகளில் பாதுகாப்பு பணியில் தலா 30 பேலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திரைப்படத்திற்கு எதிராக 6 இடங்களில் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The Kerala Story
The Kerala Story Image source jagran

போலீசார் குவிப்பு:

மேலும், கோவையில் இன்று ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகும் நிலையில், படம் வெளியாகும் மால்களில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The Kerala Story
The Kerala Story File Image

தி கேரளா ஸ்டோரி:

லதா சீனிவாசன் எழுதிய, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கிய இந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு 10 காட்சிகளை நீக்கி மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.