6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் வருகிறது.

நம்மில் பலருக்கும் 15 -ஆயிரம் பட்ஜெட்டில் நல்ல போன் வாங்கவேண்டும் நல்ல அம்சங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்படி காத்திருந்தவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G)  போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதனை விவரமாக பார்க்கலாம்.

மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) சிறப்பு அம்சங்கள்

  • Moto G64 5G போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 இன் மூலம் இயங்குகிறது. இந்த போனில் 3 வருடத்திற்கான OS புதுப்பிப்புடனும் வருகிறது.
  • இந்த போனில் 6.5-இன்ச் (FULL HD) முழு-எச்டி+ (1,080×2,400 பிக்சல்கள்) எல்சிடி (LSD) டிஸ்பிளேவை கொண்டு வந்துள்ளது.
  • இந்த போன் 50எம்பி முதன்மை கேமராவை கொண்டுள்ளது. அதைப்போல 8 எம்பிஅல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸையும் கொண்டு இருக்கிறது. செல்பி கேமராவை பொறுத்தவரையில் 16MP செல்ஃபி கேமராவை கொண்டு இருக்கிறது. கேமரா அம்சம் நன்றாக இருப்பதால் கண்டிப்பாக புகைப்படங்களை எடுப்பவர்களுக்கு இந்த போன் பிடிக்கும்.
  • பேட்டரி மற்றும் சார்ஜ் வசதியை பொறுத்தவரையில், இந்த மோட்டோ ஜி 64 5ஜி போன் ஆனது 33W சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது. எனவே சார்ஜ் மெதுவாக தான் குறையும்.
  • இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாடலும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டு ஒரு மாடலும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
  • இந்த Moto G64 5G போனில் நாம் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம். அதைப்போல மேமரி கார்டு பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

விலை என்ன? 

இப்படியான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த போனின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் Moto G64 5Gயின் 8ஜிபி+128ஜிபி ரேம் மாடலின் ஆரம்ப விலை ரூ.14,999 ஆகவும், 12ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 16,999க்கும் அறிமுகம் ஆகி உள்ளது. இது ஆரம்ப விலை தான் எனவே வரும் காலத்தில் விற்பனை விலை மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.

விற்பனைக்கு எப்போது வருகிறது? 

மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் ஆனது இன்று (ஏப்ரல் 16) ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது. இந்தியாவில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல்  விற்பனைக்கு வருகிறது. எனவே, மேலே இருக்கும் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை உங்களுக்கு பிடித்தது போல இருந்தது என்றால் நீங்கள் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல்  Flipkart, Amazon உள்ளிட்டவைகளில் வாங்கி கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஆஃப்லைன் ஸ்டோர்களில்  கூடவும் வாங்கி கொள்ளலாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.