தி லெஜெண்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! 5 மொழிகளில் அண்ணாச்சி மாஸ் என்ட்ரி.!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள “தி லெஜன்ட்” படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள்  ஆவலுடன் காத்துள்ளனர். இந்த திரைப்படத்தில்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய செரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த அருள் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ் ஆக தயாராக உள்ளது படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 28-ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment