சியான் 60 திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது.  

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் “சியான் 60”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில்  கொடைக்கானலில் தொடங்கியது, இதனையடுத்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோருடன் சமீபத்தில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் சென்ற படக்குழுவினர் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். அடுத்ததாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நேபாள எல்லையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அதுவும் முடித்து விட்டால் சியான் 60 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.