காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்கள். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

அடுத்ததாக படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பது. இதனையடுத்து படங்களின் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்ததையடுத்து  கடந்த சில நாட்களுக்கு முன்பு  “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது. இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த வார இறுதிக்குள் முழு படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்து. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி,  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.