கோப்ரா திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.!

கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் படத்தின் நடைபெறவுள்ளது. 

நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், சியான் 60, கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், விக்ரம் பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய திரைப்படங்களில் நடிக்க சென்றுவிட்டார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் வாழ் பயிற்சி செய்யும் வீடியோ வெளியானது. அடுத்ததாக நேற்று சியான் 60 படகுழுவுடன் இருந்தார்.

இதனால் கோப்ரா படக்குழு விக்ரம் இல்லாத காட்சியை படமாக்கினர். இந்த நிலையில், தற்போது மீண்டும்  நடிகர் விக்ரம் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நாளை கலந்துகொள்ளவுள்ளார்.  கொல்கத்தாவில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை நடைபெறவுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.