தி கேரளா ஸ்டோரி… மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு; முதல்வர் அறிவிப்பு.!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை எழுந்ததை அடுத்து, இந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டுவந்தது, இந்த திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என அறிவித்ததை அடுத்து படம் நேற்று வெளியானது.

தென் மாநிலங்களில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டு, லவ் ஜிஹாத் மூலம் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாக கேரளா ஸ்டோரி கூறப்படுகிறது.

எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் மோசமான வெளிச்சத்தில் காட்டுவதை நோக்கமாகக் கொண்ட திரைப்படம் இது அல்ல, மாறாக, பயங்கரவாத அமைப்புகளில் சேர பெண்கள் ஏமாற்றப்படும் கேரளாவின் குழப்பமான உண்மையைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதனை இன்று காலை தனது ட்விட்டரில் அறிவித்தார்.

author avatar
Muthu Kumar