Connect with us

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சோகம்.. பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு.!

Dead

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சோகம்.. பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு.!

Illicit Liquor: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டதாக தெரிகிறது. அதனை அருந்தியதால் நேற்று பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முதலில், நேற்று நிகழ்ந்த உயிரிழப்புகள் விஷச்சாராயத்தால் நிகழவில்லை எனவும், வேறு உடல் உபாதைகள் இருந்ததாகவும் கூறியிருந்த்தார். இதனை அடுத்தும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சி விவகாரம் பூதாகரமாக மாறியது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய சுரேஷ், பிரவீன்,  ராஜேந்திரன் மகன் சுரேஷ் , சேகா், கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா,  மணிகண்டன், தனகோடி, சுப்பிரமணி, நாராயணசாமி , ராமு ,  ஆறுமுகம் என பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர் . மேலும் பலர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பிரச்சனையின் தீவிரம் அறிந்த தமிழக அரசு உடனடியாக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டு எம்.எஸ்.பிரசாந்த் புதிய ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். மாவட்ட எஸ்பி சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய எஸ்.பியாக  ரஜத் சதுர்வேதி பணியமர்த்தப்பட்டார். மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை விசாரிக்க வழக்கு சிபிசிஐடி நேற்று சம்பவம் தொடர்பாக உடனடியாக அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து வருகிறது. இன்று காலை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுவரை கள்ளசாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டார். தற்போது வெளியான தகவலின்படி, இதுவரை 33 பேர் கள்ளசாராயத்திற்கு பலியாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Continue Reading

More in தமிழ்நாடு

To Top