நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

By

சென்னை : மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பது தொடங்கி, குஜராத்தில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியீடு, பதிவு எண்கள் தொடர்ச்சியாக உள்ள 6 பேர் ஒரே மையத்தில் தேர்வெழுதி முதலிடம் பெற்றிருப்பது உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடுகள் பல மாணவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன.

மேலும், இந்த விவகாரம் குறித்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில், ” சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான தங்களின் கொள்கை, நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம், “நீட், பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை, கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை, சமூகநீதிக்கு எதிரானவை, நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023