குட் நீயூஸ்..!மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜூலை 1 முதல் ஊதிய உயர்வா?…!

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு,அவர்களின் ஊதியத்தில் தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் வழங்கப்படும் டிஏ ஆனது, 28 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (டிஏ) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர்,2019 ஆம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது.பின்னர்,2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும்,2021 ஜனவரியில் 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது.இருப்பினும், இந்த மூன்று தவணைகளும் இதுவரை செலுத்தப்படவில்லை.

இந்நிலையில்,மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி காத்திருந்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.அதாவது,ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

  • ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 17% என்ற விகிதத்தில் கிடைக்கிறது,அது நேரடியாக 28% ஆக அதிகரிக்கவுள்ளது.
  • அதுமட்டுமல்லாமல்,ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள தவணைகளும் வழங்கப்படும்.
  • மத்திய அரசின் அடிப்படை பணியில் உள்ளவர்களின் குறைந்தபட்ச ஊதியம் 18,000 ஆகும். இதில்,15 சதவீத அகவிலைப்படி,உயர்வு சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு சேர்க்கப்பட்டால் ,மாதத்திற்கு ரூ.2,700,ஆண்டிற்கு ரூ.32,400 ஆக சம்பளம் உயரும்.
  • இதன் மூலம்,50 லட்சம் மத்திய பணியாளர்களும், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.
  • மேலும்,சம்பளம் தற்போது கொடுப்பனவுகள் இல்லாமல் உள்ளது. இப்போது இந்த சம்பளத்தில் அகவிலைப்படி (DA), பயண கொடுப்பனவு (TA), மருத்துவ இழப்பீடு மற்றும் எச்ஆர்ஏ போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படும்.அதன் பிறகு இறுதி சம்பளம் நிர்ணயிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இதுகுறித்து,ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் பணியாளர் நல செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில்: “மத்திய அரசு ஊழியரின் டி.ஏ.ஆனது தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து ,குறைந்தபட்சமாக 28 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில்,ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது 7 வது சிபிசி பொருத்துதல் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

எனவே,ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) போன்ற மாத பங்களிப்பு ஜூலை முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,ஏழாவது ஊதிய கமிஷன் பொருத்துதல் காரணியை,அடிப்படை சம்பளத்தை பொருத்துதல் காரணியுடன் பெருக்கி,அதாவது,ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 என்றால், அவரது சம்பளம் 18,000 x 2.57 = ரூ. 46,260 ஆகும்.எனவே,அந்த வகையில் மாதாந்திர அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படும்”,என்று கூறினார்.

Recent Posts

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

53 mins ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

9 hours ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

10 hours ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

10 hours ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

13 hours ago