ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!

அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.

அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் ஆக-21-ம் தேதி  முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் .

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஷங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளது. இதற்கிடையில், ரவுடி சங்கர் வெட்டியதால் படு காயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்  சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில் ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை போலீசார் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில்,  ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை சென்னை போலீசாரின் பரிந்துரையை ஏற்று வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.