தளபதி 64: விஜய்க்கு ஜோடியாக களமிறங்கும் பேட்ட பட நடிகை..!

தற்பொழுது தளபதி விஜய் நடித்துள்ள படம், பிகில். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
Image
இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகையான மாளவிகா மோகனன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக படக்குழு அங்கிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர், 2013 ஆம் ஆண்டு மலையாத்தில் வெளிவந்த பட்டம் ரோல் என்ற படம் மூலம் அறிமுகமானார்.
தமிழில் பேட்ட படத்தில் நடித்து வந்த மாளவிகா மோகனன், தற்பொழுது தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இவர், தளபதி 64 படத்தில் நடிகர் விஜயுடன் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், படத்தின் இயக்குனருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.