#Breaking: ஆசிரியர் தகுதித் தேர்வு…. TET தாள் 2 முடிவுகள் வெளியீடு.!

டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிக்கான (டெட் 2-ம் தாள் தேர்வு) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை கணினி வழியில் நடைபெற்றது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகள்  வெளியாகியுள்ளது.

www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். TN TET என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் மாநில அளவிலான தேர்வு ஆகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment