Sunday, June 2, 2024

பயங்கரம்…படகு பாறைகளில் மோதி விபத்து..! 59 பேர் உயிரிழப்பு..!

இத்தாலிய கடற்கரை அருகே படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கியில் இருந்து ஐரோப்பாவிற்கு குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மரப்படகு இத்தாலிய கடற்கரை அருகே விபத்துக்குள்ளாகி உடைந்ததில் 12 குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். துருக்கியில் இருந்து ஐரோப்பாவிற்கு குடியேறிய 140க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பாய்மரப் படகு தெற்கு இத்தாலிய கடற்கரை அருகே பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 140 பேரில் 59 பேர் உயிரிழந்தனர். இந்த படகு நான்கு நாட்களுக்கு முன்பு மேற்கு துறைமுகமான இஸ்மிரில் இருந்து புறப்பட்டு ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களை ஏற்றிச்சென்றது. அதன் பின் கலாப்ரியாவில் உள்ள இத்தாலிய கடற்கரை அருகே உள்ள கரடுமுரடான பாறைகளில் மோதி உடைந்துள்ளது.

தகவல் அறிந்த மீட்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை, கடல் மற்றும் கடற்கரையோரங்களில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 81 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த விபத்தில் உடைந்த படகின் துண்டுகள் கடற்கரை பகுதியில் சிதறிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES