32.2 C
Chennai
Thursday, June 1, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

20 வயதிலே பயங்கர விபத்து…முகத்தில் மட்டும் 5 எலும்பு முறிவு…விஜய் ஆண்டனி கூறிய அதிர்ச்சி தகவல்.!!

நடிகராகவும்,இசையமைப்பாளராகவும், தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவர் சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,  விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது.

Vijay Antony
Vijay Antony [Image source : twitter/ ]

இந்த பயங்கரமான விபத்தில் எலும்புகள் முறிந்து அவருக்கு  அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால், விஜய் ஆண்டனிக்கு இது முதன் முறை ஏற்பட்ட விபத்து இல்லயாம். இதற்கு முன்பே  20 வயது இருக்கும்போதே பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Vijay Antony
Vijay Antony [Image source : twitter/@Bhashyasree ]

இது குறித்து பேசிய விஜய் ஆண்டனி ” எனக்கு 20 வயது இருக்கும்போதே பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. இப்போது ஏற்பட்ட விபத்தை போலவே, முகத்தில் தான் எனக்கு அடி விழுந்தது. 5 எலும்புகள் முறிந்தது. பைக்கில் போய் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் என்னுடைய வலது கண் பகுதியில் பயங்கரமான காயம் ஏற்பட்டது.

Vijay Antony
Vijay Antony [Image source : twitter/@OnlyKollywood ]

அந்த விபத்தில் எனக்கு 5 எலும்புகள் முறிந்தது. இப்போது நான் பேசிக்கொண்டு இருப்பதால் அது தெரியாது. இரவு நேரங்களில் வேலை செய்துகொண்டிருக்கும்போது என்னுடைய முகம் மாறும். இந்த விபத்தில் இருந்து தான் என்னை மருத்துவர்கள் பைக் ஓட்டக்கூடாது என்று கூறினார்கள்.

VijayAntony
VijayAntony [Image source : twitter/@TFU_Kannan]

பைக் ஓட்டினால் சில பிரச்சனைகள் வரும் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ளுங்கள், முடிந்தால் கார் வாங்கிக்கொண்டு அதில் பயணம் செய்யுங்கள் என அறிவுத்தினார்கள். ஆனால் என்னிடம் அப்போது வசதி இல்லை பிறகு லோன் போட்டு தான் கார் வாங்கினேன். எனக்கு அந்த விபத்து முடிந்த பிறகு தான் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணம் வந்தது. அதைபோல், இப்போது நடந்த விபத்தில் இருந்து நான் மிகவும் சுறு சுறுப்பாக இருக்கிறேன்” என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அண்ணா என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.