மக்களே எச்சரிக்கை…! தமிழகத்தில் மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை – வானிலை ஆய்வு மையம்!

சமீபத்திய வருடங்களில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டு பதிவாகியிருக்கிறது. கோடை முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் தமிழகத்தில் வெப்பநிலையானது குறைந்தபாடில்லை.

சில நேரங்களில் சில இடங்களில் மழை பெய்த வந்தாலும், பின்னர் வெப்பம் உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று கூட மதுரையில் 41.7 டிகிரி வெப்பம் பதிவானது. ஆகஸ்ட் மாதத்திற்கு இந்த வெப்பநிலை மிகவும் அதிகமாகும். இதனால் கவனமாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்து வருகிறது.

ஆனால், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்பொழுது, மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.