3ம் அணி உருவாக்கும் முயற்சி!மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.

இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இதனால்  3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.

தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.

Leave a Comment