ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் முறைக்கேடா ?ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடைபெற்றது .
ஆனால் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்தனர்.
இதனால் கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தொழில்நுட்பக் கோளாறால் தேர்வை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு  நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்  தெரிவித்தார்.
தேர்வு நடைபெற்ற  அதே நேரத்தில்  கும்பலாக கூடி விவாதித்தும், மொபைல்போனில் கேட்டும் நிதானமாக விடைகளை எழுதி இருப்பதும் அம்பலமாகியது.போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனங்களை, மையங்களாக அமைத்ததால், அங்குள்ள பயிற்சியாளர்கள், தேர்வர்கள் காப்பி அடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.அதில், முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. தேர்வு நடைபெற்ற 119 மையங்களில், 3 மையங்களில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது.
திருச்செங்கோட்டில் தேர்வு முடிந்த பின்பு, தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதிக்கப்பட்டது குறித்து ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்படும். முறைகேடுகள் ஏதும் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago