தங்கப் பதக்கங்களை வேட்டையாடும் தமிழக வீரர்கள்…பதக்க பட்டியலில் எந்த இடம்?

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழ்நாடு  இரண்டாம் இடத்திலும் இருந்தனர். ஆனால், இன்றைய தினம் மகாராஷ்டிரா பதக்கப் பட்டியலில் 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியானா பதக்கப் பட்டியலில் 18 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

ஆறாம் நாளான நேற்று ஆடவர் மற்றும் மகளிருக்கான ஸ்குவாஷ் குரூப் போட்டிகள், 400மீ ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் ஆகிய தடகள போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

கேலோ இந்தியா – தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை!

தற்போது, பதக்கபட்டியலில் மகாராஷ்டிரா 25 தங்க பதக்கத்தையும், 21 வெள்ளிப் பதக்கங்களையும், 26  வெண்கலம் பதக்கம் என மொத்தம் 72 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.

கேலோ இந்தியா – ஒரே நாளில் தமிழகத்துக்கு 6 தங்கப்பதக்கம்!

அடுத்தபடியாக, ஹரியானா 18 தங்கம், 11 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 17 தங்கம், 8 வெள்ளி 23 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் தமிழகம் 3ஆவது இடத்தில் உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.