தலிபான்களின் தாக்குதலை முறியடித்த ஆப்கானிஸ்தான் அரசு..!-20 பேர் கொல்லப்பட்டனர்..!

ஆப்கானிஸ்தான் மாகாண தலைநகர் மீது தலிபான் தாக்குதல் நடத்தியதை முறியடித்தது ஆப்கான் அரசு, இதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, இன்று வடக்கு மாகாணமான சமங்கனின் தலைநகரான அய்பாக் மீது நடத்தப்பட்ட தாக்குதலை முறியடித்ததில் குறைந்தது 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது.

தலிபான் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நேரத்தில் நகரத்தை பல திசைகளிலிருந்து தாக்கி, கட்டுப்பாட்டை எடுக்க முயற்சி செய்துள்ளனர்.  இதற்கு முன்னர் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டதாவது, கிளர்ச்சியாளர்கள் அய்பாக்கின் பல பகுதிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர் என்று தெரிவித்தார்.

அந்த இடத்தின் உள்ளூர் வட்டாரங்கள் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று தலிபான்கள் பாக்லான் மாகாணத்தின் தலைநகரான புல்-இ-கும்ரி நகரத்தையும் தாக்கியுள்ளதாகவும் கடுமையான போர்களுக்கு தூண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தலிபான் தீவிரவாதிகள் தாலுகான், சாரி புல் மற்றும் சராஞ்ச் ஆகிய மூன்று மாகாண தலைநகரங்களை கடந்த சில நாட்களாக கடும் மோதல்களுக்கு பிறகு கைப்பற்றியது. இதனிடையில் குண்டூஸ் மாகாணத்தையும் தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 200 மாவட்டங்களை ஆயுதமேந்திய அமைப்பு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.