பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 110 நாட்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவானந்த், காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெல்லையில் இடிந்து விழும் நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்…!!

நெல்லை : பணகுடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் 10 வருடமாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் வருகிறது. புதிய கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பலத்த காற்று காரணமாக நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு போகவில்லை…!!

நெல்லை : பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 8000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கூத்தென்குழி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டும் பணியில் தீவிரம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தென்குழி என்னும் கடற்கரை கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் போது வரும் கடல் மண் அரிப்பை தடுக்கும் எண்ணத்தில் தமிழக அரசால் சுமார் 8 கோடி மதிப்பிட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.