ருத்ரதாண்டவம் படத்தின் இரண்டாவது அறிவிப்பு…!

ருத்ரதாண்டவம் படத்திற்கான இரண்டாவது அறிவிப்பு மாலை 5 மணிக்கு வரும் என்று இயக்குனர் மோகன் ஜி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் மோகன் ஜி ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் … Read more

திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!

கடந்தாண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவராலும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரௌபதி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்து பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது மோகன் அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. “ருத்ர தாண்டவம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திலும் ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.