நிதி நெருக்கடியில் தள்ளாடும் காங்கிரஸ்: கட்சியினர் கைவிட்டதால் பொதுமக்களிடம் நிதி திரட்ட முடிவு..!

பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. இதை சமாளிப்பதற்காக, பொதுமக்களிடம் நிதி திரட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது. தேர்தல் நெருங்கும்போது நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, கட்சிகளின் நிதி நிலைமையிலும் மாற்றம் ஏற்படுவது வழக்கம். எனினும், இது தேசிய கட்சிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. இப்போது காங்கிரஸ் கட்சி முதன்முறையாக நிதிப் பற்றாக்குறையால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் இறுதியிலேயே இந்தப் பிரச்சினை தொடங்கிவிட்டது. அதாவது, … Read more

மகாராஷ்ட்ராவிலும் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ்..!

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்ட்டிராவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மகாராஷ்ட்டிராவில் மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர். சிறிய கட்சி, பெரிய கட்சி என பேதமின்றி அனைத்து தரப்பினருடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ஸ்வாபிமானி ஷட்காரி சங்காதனா, பகுஜன் விகாஸ் ஆகாதி உள்ளிட்ட … Read more

அத்வானிக்கு மோடியை விட காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்துள்ளது – ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அனைத்து தரப்பு மக்களை மும்பை நகரம் உள்வாங்கி கொண்டு செயல்படுவதுபோல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வருவதாக ராகுல் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஒரு மூத்த அரசியல்வாதி, இந்த நாட்டை பாதுகாக்க காங்கிரசால்தான் முடியும் என 50 ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்துள்ளதாக … Read more

ராகுல் காந்தி மும்பை வருகை.! வரவேற்க 1000 ஆட்டோக்கள் காத்திருப்பு..!

அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக வரும் செவ்வாய் கிழமை மும்பைக்கு பயணம் செய்யும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் கட்சியின் பூத் மட்டத்திலான நிர்வாகிகள் முன்னிலையில்  உரையாற்ற உள்ளார். இந்நிலையில், மும்பை வரும் ராகுல் காந்தியை வரவேற்க 1000 ஆட்டோ ஓட்டுனர்கள் முடிவு செய்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்ஜய் நிரூபன் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ராகுல் காந்தி சாதாரண … Read more

கர்நாடகாவில் அதிருப்தி கோஷ்டியை இழுக்க எடியூரப்பா மீண்டும் முயற்சி

கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி மந்திரி சபையில் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி கோஷ்டி உருவாகி உள்ளது. அவர்கள் முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள். அதிருப்தியாளர்களை சமாதப்படுத்தும் ராகுல் காந்தியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அதிருப்தியாளர்கள் ஏமாற்றத்துடன் பெங்களூர் திரும்பினார்கள். இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.   இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும் எதிர்கட்சி தலைவருமான எடியூரப்பா கட்சி … Read more

கர்நாடகத்தில் அமைச்சர் பதவி சிக்கல்! காங். அதிருப்தியாளர்களுக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை..!

கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது. இதையடுத்து ஜே.டி.எஸ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிசபை பதவி ஏற்றது முதல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. முதலில் இலாக்காக்கள் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இறுதியில் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தியது. குமாரசாமியே 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக நீடிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. … Read more

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பிரிவு ?எம்.எல்.ஏ.க்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு..!

கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள குமாரசாமி மந்திரிசபை கடந்த 6-ந்தேதி விஸ்தரிக்கப்பட்டது. அதில், மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த முன்னாள் மந்திரியும், லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரிக்க குரல் கொடுத்தவருமான எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆதரவாக 15 முதல் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், கர்நாடக காங்கிரஸ் … Read more

காங்கிரஸ் MLAக்கள் பாஜகவில் சேர விருப்பம்….எடியூரப்பா தகவல்..!

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதாவில் சேர மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள பல எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியில் இணைய, ஆர்வத்துடன் உள்ளனர் என்றார். தற்போதைய கூட்டணி அரசு எத்தனை நாட்கள் பதவியில் நீடிக்கும் … Read more

கான்பூரில் நோயாளிகள் மரணம் – சுகாதார துறைஅமைச்சர் பதவி விலக காங். வலியுறுத்தல்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரணையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி … Read more

கோவா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சந்தாராம் நாயக் மாரடைப்பால் மரணம்.!

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் சந்தாராம் நாயக். ராகுல் காந்தி அரசியலில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இவர் தனது மாநிலத் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில்,  இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் மார்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சந்தாராம் நாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக, கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரடிமா கவுண்டிகோ தெரிவித்துள்ளார். 72 வயதான இவர் ஒரு … Read more